×

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பிப்.6-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வளர்மதி மேல்முறையீடு செய்திருந்தார். முடித்து வைக்கப்பட்ட வழக்கை 10 ஆண்டுகளுக்கு பின் தாமாக முன்வந்து விசாரிப்பது ஏற்புடையதல்ல வளர்மதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்ற வேறொரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவை அறிக்கையாக அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,P. Valarmathi ,Chennai ,Varamathi ,Supreme Court ,Court ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி